மேகதாது அணை கட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் அரசியல் செய்வது யாருக்கும் நல்லதல்ல. ஒரு மாதத்திற்குள் மேகதாது அணை கட்ட ஆட்சேபனை இல்லை எனத் தமிழக அரசு சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் முதற்கட்ட போராட்டமாக கர்நாடகாவில் தமிழ் படங்கள் திரையிட விட மாட்டோம் என கன்னட சலுவளி வாட்டாள் பக்ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.