கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் என 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என அவர் கூறியுள்ளார்.