கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் அது பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தாகம் எடுக்கும் போது மட்டும் ஒரே நேரத்தில் குடிக்காமல், சீரான இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.