சீரான மற்றும் சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பற்றி பொது மக்களுக்கு கற்பிப்பதே இந்த வாரத்தின் முதன்மை நோக்கம். சிறந்த ஆரோக்கியத்திற்கும், நோய்களை தடுப்பதற்கும் சரியான உணவுப் பழக்கத்தை தேர்வு செய்வதை இந்த வாரம் ஊக்குவிக்கிறது. ஊட்டச்சத்து கல்வியில் கவனம் செலுத்துவதன் மூலமாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அது தொடர்பான உடல்நல பிரச்சனைகளை குறித்து மக்கள் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.