திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

17778பார்த்தது
திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி