ஈசிஆரில் விபத்து - 4 பேர் பரிதாப பலி

67பார்த்தது
ஈசிஆரில் விபத்து - 4 பேர் பரிதாப பலி
சென்னை, ஈசிஆரில் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் நேற்று (மே 14) அதிவேகமாக வந்த கார், குறுக்கே வந்த மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. மாடு மீது மோதி, பின் மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் அனைவரும் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மேலும் ஒருவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி