மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்

70பார்த்தது
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு மாத காலமாக விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைகாலம் முடிந்ததால் நாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜுன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 61 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்வதாகவும், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி