மேகமலையில் திடீர் வெள்ளப் பெருக்கு!

79பார்த்தது
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் நேற்று திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து, இன்று நீர் வரத்து சீரான போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்