சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

81பார்த்தது
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்னை மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையிலான நீல வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று (மே 15) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமான நிலையத்திற்கு செல்ல இருக்கும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ சென்று அங்கிருந்து பச்சை வழித் தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி