லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

25780பார்த்தது
கடலூரைச் சேர்ந்த அப்துல், மனைவி ஜெய்பினிஷா, மகன்கள் அக்தல், பைசல் மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (மே 14) பயணம் செய்தனர். அப்துல் துபாய்க்கு வேலை விஷயமாக பயணம் செய்ய அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வரும்பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது கார் பின்னால் மோதியதில் சம்பவ இடத்தில் ஜெய்பினிஷா இவர் உடைய மகன்கள் அக்தல், பைசல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். கார் ஓட்டுநர் சரவணன் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி