ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு

54பார்த்தது
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து அகற்றம் செய்யப்பட்டது. ஹைதரபாத் லோட்டஸ் பாண்டில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு உள்ளது. பாதுகாப்பு ஊழியர்களுக்காக ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் வெளியே கட்டடம் 1 கட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து ஜெகன்மோகன் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த கட்டடம் ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி