ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என்ற நிலையில் 5 கிலோ வரை கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதற்காக மாதம் 17,100 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், இம்மாதத்தில் இருந்து கோதுமை ஒதுக்கீடு 8,576 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கார்டுக்கு 2 கிலோ அளவில் கோதுமை வழங்க ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.