பெரும்பாலான நாடுகளில் ஒட்டுமொத்த பரப்பளவில் காடுகளின் பரப்பளவு குறைவாகவே இருக்கிறது. அதற்கு மாறாக 94 சதவீதத்தை காடுகளாலேயே நிரப்பி இருக்கும் நாடும் இருக்கதான் செய்கிறது. அதன் பெயர் 'சுரிநாம்'. தென் அமெரிக்காவில் அமைந்திருக்கும் இந்நாடு அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 13 ஆயிரம் பேர் இந்த நாட்டில் வாழ்கின்றனர். இங்கும் காடுகளை அழிப்பது நடக்கதான் செய்கிறது.