நாங்கள் அரையிறுதியில் விளையாடுவோம்.. தஸ்கின் அகமது

81பார்த்தது
நாங்கள் அரையிறுதியில் விளையாடுவோம்.. தஸ்கின் அகமது
டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்நிலையில் நாங்கள் கண்டிப்பாக அரையிறுதியில் விளையாடுவோம் என வங்காளதேச வீரர் தஸ்கின் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயமாக, எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இங்கே விக்கெட் நன்றாக இருக்கிறது. ஆனால் வெற்றி எளிதில் வராது. அடுத்த போட்டியில் (இந்தியாவுக்கு எதிராக) நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பில் இருப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி