கள்ளச்சாராயம் உற்பத்தி நடக்காது.. உறுதியேற்ற மக்கள்

52பார்த்தது
கள்ளச்சாராயம் உற்பத்தி  நடக்காது.. உறுதியேற்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று(21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆயவின் போது சிக்கிய 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதன்பின்னர், அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது; அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி