காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு கொடூர தண்டனை! (வீடியோ)

50பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இளம்பெண் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட திருமணமான பெண் சமீபத்தில் காதலனுடன் தலைமறைவாகி உள்ளார். உறவினர்கள் அப்பெண்ணை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து, பஞ்சாயத்தில் அவளை அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தினர் முன்னிலையில் 4 பேர் அவளை பிடித்துக் கொள்ள மரக்கட்டையால் ஒருவர் அவளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் புகாரளிக்க போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகிய 4 பேரை தேடி போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி