"நல்ல தயாரிப்பாளரை இழந்து விட்டோம்" - தனஞ்ஜெயன் வருத்தம்.!

79பார்த்தது
"நல்ல தயாரிப்பாளரை இழந்து விட்டோம்" - தனஞ்ஜெயன் வருத்தம்.!
மரகத நாணயம், ராட்சசன் உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு உடல் நலக்குறைவால் இன்று (செப்.9) காலமானார். இது குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இந்த அதிர்ச்சியான செய்தியுடன் தான் காலை எழுந்தேன். டில்லி பாபுவின் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மிக நட்பாகவும், தனது துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடனும் இருந்தவரை இழந்துவிட்டோம். விதி அவரை பறித்து விட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி