கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேளர அரசு ரத்து செய்துள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.