ஹிமாச்சல பிரதேசம்: பிலாஸ்பூரின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பாம்பர் தாக்கூர் நேற்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார். தாக்கூர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி (பிஎஸ்ஓ) காயம் அடைந்தனர். தாக்கூரின் காலில் குண்டு காயம் ஏற்பட்ட நிலையில், சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது பாதுகாப்பு அதிகாரி எய்ம்ஸ் பிலாஸ்பூரில் சேர்க்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.