கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை (மார்ச் 16) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று (மார்ச் 15) முதல் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 17 முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.