17 வயதில் தான் நடித்த "சிந்து சமவெளி" படத்தால் பல இன்னல்களுக்கு ஆளானது குறித்து நடிகை அமலாபால் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அமலாபால் கூறியதாவது, “சிந்து சமவெளி படம் வெளிவந்த பின் பல துன்பங்களை நான் சந்தித்தேன். எனது குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னை விட என் தந்தைதான் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனால் மைனா படத்தின் விளம்பர விழாவிற்குக்கூட என்னால் போக முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.