சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோபி அங்குள்ள 'ராதா பேக்கரி'யில் கேக் வாங்கினார். கேக்கை சாப்பிட்ட நால்வர் வாந்தி எடுத்த நிலையில் உட்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து பேக்கரி உரிமையாளர் சரியாக பதிலளிக்காததால் புகாரின் பேரில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது கேக்கின் அடிப்பகுதியில் செய்தித்தாள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.