விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்

80பார்த்தது
*விருதுநகர் சந்தை: உச்சபட்ச விலையை தொட்ட துவரம் பருப்பு: உருட்டு உளுந்து, பாமாயில் விலை உயர்வு: வத்தல் விலை குறைவு. *

விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு வரலாறு காணாத வகையில் பெரும் விலை உயர்ந்துள்ளது. பாமாயில், உருட்டு உளுந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. முண்டு வத்தல், பாமாயில் விலை சற்று குறைந்தது.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது.

பாமாயில் விலையானது கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1550 என விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்க ரூ. 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே டின் ஒன்று ரூ1565 என விற்கப்படுகிறது.

முண்டு வத்தல் புதுசு வகை 100 கிலோ ரூ. 18ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ஆயிரம் வரை குறைந்துள்ளது. எனவே, ரூ. 17 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி