தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

24174பார்த்தது
தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

தொடர்புடைய செய்தி