கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
சின்னபேராளி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா இவர் சின்ன பேராளி சாலை ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சுரேஷ், கார்த்திக், சங்கர் ஆகிய மூவரும் பெரியவர்கள் முதல் சிறியவரகள் வரை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கஞ்சாவை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது அதை தொடந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த ஊரக காவல் நிலைய போலீசார் சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கைது செய்தனர். மேலும் சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.