105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி!

61பார்த்தது
105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி!
105 வயதில் முதுகலை பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி. அமெரிக்காவை சேர்ந்த ஜின்னி ஹிஸ்லோப்பின் கணவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்பதற்காக சென்றதால் அவரால் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதியில் விட்ட முதுகலை பட்டப்படிப்பை சுமார் 80 ஆண்டுகளுக்கு பின் படித்து பட்டம் பெற்றுள்ளார் ஜின்னி ஹிஸ்லோப். இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும், தற்போது தனது விருப்பம் நிறைவேறியுள்ளதாக ஜின்னி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி