உங்களுடைய கனவுகள் எங்களுடைய லட்சியங்கள் - மோடி

68பார்த்தது
உங்களுடைய கனவுகள் எங்களுடைய லட்சியங்கள் - மோடி
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மிகக் கடுமையாக உழைத்துள்ளது. திருநெல்வேலி, சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கினோம். எங்களுடைய லட்சியம் தூய்மையான அரசியல். ஒரேயொரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். உங்களுடையக் கனவுகள்தான் எங்களுடைய லட்சியங்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி