சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கியவர் கைது

66பார்த்தது
சிதம்பராபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில்குமார். இவர் சிதம்பராபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ராமதாஸ் என்பவரின் வீட்டை சோதனை செய்தல் வீட்டில் சட்ட விரோதமாக 15 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது, தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய ஆபத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி