மதுரை அருகே அழகர் கோவிலில் நேற்று முன்தினம் (அக்., 17) மாலை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மலைமேல் அமைந்துள்ள முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் உள்ள வித்தக விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, மற்றும் வேல் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர். அமைச்சருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.