விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 22. 03. 2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 23. 03. 2025 - அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
உலக தண்ணீர் தினத்தின் சுருப்பொருளினைப் பற்றி விவாதித்தல் வான்தரும் மழைநீரினை சேகரித்தல்.
சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல். உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல். மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
நிலத்தடி நீரை செறியூட்டுதல்.
நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல்.
மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளர்த்தல். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல். நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல். நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து
கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன தெரிவித்துள்ளார்