விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கீழக்கண்டமங்கலம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ. 10.00 இலட்சம் மதிப்பில், புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும், புலிக்குறிச்சி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ. 14.60 இலட்சம் மதிப்பில், புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும், கீழக்கண்டமங்கலம் ஊராட்சியில், கோணப்பந்நேந்தல் கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், தமிழ்பாடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ. 10 இலட்சம் மதிப்பில், செவல் கண்மாய்க்கு அருகில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும், உடையானம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ. 5 இலட்சம் மதிப்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.