தற்போது வயது வித்தியாசம் பாராமல் பலருக்கும் இதய நோய் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பலரும் உடல் நலனில் அக்கறை கொள்ளாததுதான். நெஞ்சு வலி, நெஞ்சு பகுதியில் சிரமம், சுவாசமின்மை, கழுத்து, தாடை, முதுகு அல்லது கைகளை சுற்றி வலி, மயக்கம், வாந்தி, அதிகமாக வியர்த்தல் போன்றவை இதய நோய்களுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீண்ட ஆயுளுக்கு இதய ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.