நெய்யில் விலங்கு கொழுப்புகள் கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்து வருகிறது. சுத்தமான நெய், அறை வெப்ப நிலையில் உருகும். எனவே நெய்யை உள்ளங்கையில் வைத்துப் பாருங்கள். நெய் உருகினால் அது சுத்தமான நெய்யாகும். அதேபோல் வாணலியில் சூடு படுத்தும் பொழுது அது உருகி பிரவுன் நிறத்திற்கு வந்தால் அது சுத்தமான நெய். தாமதமாக உருகி மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்பட நெய். சுத்தமான நெய்யில் ஏற்றிய தீபம் நீண்ட நேரம் எரியும். கலப்பட நெய் விரைவில் கருகிவிடும்.