பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதி உதவி தொகை பெறலாம்

72பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்தல் மற்றும் விவசாயிகளுக்கு அடையாள எண்  உருவாக்குதல் பணிகள்  நடைபெற்று வருகிறது. வேளாண்மை உழவர் நலத்துறை பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்து விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்குதல்  பணிகள் நடைபெற்று வருகிறது.  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சமுதாய வளபயிற்றுனர்கள் ஆகியோரும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 51, 681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ  நிதி தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22, 258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள அனைத்து  இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.  தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண் கொண்டு சென்று பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டு அடையாள எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை ஒற்றை சாளர முறையில் பயன்படுத்த முடியும்.
மீதம் உள்ள 29, 423 விவசாயிகள் வருகிற மார்ச்-31-ம் தேதிக்குள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி