தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி விகிதத்தையும் மாத வருமானத்தையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். டெபாசிட் செய்யப்படும் தொகை 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ரூ. 5 லட்சம் வைப்புத்தொகைக்கு மாதம் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3,083.33 வருமானம் கிடைக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் பெயரிலும் கணக்கு தொடங்கலாம்.