விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதியதாக திறக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றிய திருமதி. மஹாலட்சுமி அவர்கள் காரியாபட்டி நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டு இன்று (ஜூலை-29) முதல் நாள் பணியை தொடங்கினார். அவருக்கு காரியாபட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்