விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழக அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணி நிர்வாகிகள் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கி பேசினார்.