தமிழ்நாட்டில் நாளை (டிசம்பர் 2) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப தங்களது பணிகளை முன்கூட்டியே செய்துகொள்ள மின்வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.