தொடர்மழை காரணமாக திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் புதுச்சேரி தத்தளித்து வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.