திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக, மலை அடிவாரத்தின் கீழ் உள்ள 2 வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாறைகள் விழுந்துள்ள 2 வீடுகளுக்குள் 5 முதல் 7 நபர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 வீடுகளிலும் பாறை மற்றும் மண் சரிந்துள்ளதால் 7 பேரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மீட்புப்பணியை சவாலாக்கியுள்ளது.