பெண்ணியத்தை திரைப்படங்கள் மூலம் உரக்க பேசிய இயக்குநர்களில் முதன்மையானவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். ஆண்களை சுற்றியே திரைக்கதை நகர்ந்த காலத்தில் வலிமையான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ் சினிமாவை கே.பி அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றார். சிந்து பைரவி முதல் கல்கி வரை அவரது முரண்பாடான திரைப்படங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானாலும், கேபியின் படைப்புகள் யாவும் மகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள்.