விருதுநகர்: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக ஒருவர் கைது

75பார்த்தது
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வெள்ளத்துரை இவர் ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரவீன் குமார் என்பவர் தனது இடத்தில் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிரோஸ் திரி வெள்ளை திரி, 35 குரோஸ் சாட்டை, அணைப்பட்டி, பஸ்ஸை மாவு ஒரு மூடை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி