சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், சீமான் இன்று (பிப்.,28) ஆஜராக வந்துள்ளார். அவரது காரை உள்ளே அனுமதிக்காத நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது காரின் பின்னாலேயே தொண்டர்களும் காவல் நிலையம் அருகில் நுழைந்ததால், காவல் துறையினர் அவர்களை வெளியேற்றி வருகின்றனர். இந்நிலையில், வளசாவாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், பத்திரிகையாளர்களுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.