ஸ்ரீவி: வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

69பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பிப். 26 நீதிமன்ற முகப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. பொதுக்குழுவின் முடிவின்படி மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதை முழுமையாக வாபஸ் பெற வலியுறுத்தியும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுருத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வலியுறுத்தியும், முத்திரை கட்டண விலை உயர்வு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தின் முகப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி