ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு. நகர்மன்றத் தலைவர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
தமிழகம் முழுவதும் ஏழை மக்கள் குறைந்த விலையில் மருந்துகள் வாங்கும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதே போல ஸ்ரீவில்லிபுத்துார் சின்னக்கடை வீதியில் முதல்வர் மருந்தகத்தை நகர்மன்றத் தலைவர் ரவிக் கண்ணன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த மருந்தகத்தில் சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அலோபதி உள்ளிட்ட அனைத்து வகையான மருந்துகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறுவர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.