என் இனிய தமிழ் சொந்தங்களே! தமிழில் பேசிய பிரதமர் மோடி..

76பார்த்தது
என் இனிய தமிழ் சொந்தங்களே! தமிழில் பேசிய பிரதமர் மோடி..
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, "வணக்கம், என் இனிய தமிழ் சொந்தங்களே!" என தமிழ் மொழியில் பேசினார். அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், "இன்று ராமநவமி நன்னாள் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் ராமரை வணங்கியது எனது மனதுக்கு அமைதி, இனிமையை தருகிறது. ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தபோது இறைவனின் அருள் கிடைத்ததை உணர்ந்தேன். இன்று 8300 கோடி அளவிலான நலத்திட்டங்கள் அர்பணிக்கப்படுகிறது" என கூறினார்.

தொடர்புடைய செய்தி