சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் மலைப்பாதையில் இருந்த 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சூழல் மேம்பாட்டு குழுவினர் அப்புறப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- சதுரகிரி
சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை திருவிழாவில் ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் வனப்பகுதியில் பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்களைப் அப்புறப்படுத்தும் வகையில் வனத்துறை களப்பணியாளர்கள், தாணிப்பாறை சூழல் மேம்பாட்டு குழுவினர் மற்றும் ராஜூக்கள் கல்லூரி என். சி. சி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதில் 2 டன் எடையுள்ள
எளிதில் மக்காத பாலித்தீன் கழிவுகளை சேகரித்து தாணிப்பாறை
அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பாலித்தீன் கழிவுகளை மறுசுழற்சி
செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.