சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் நேற்று (டிச., 21) முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.