கண்ணகி நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் சந்தோஷ்குமார், சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவரது நண்பர்கள், மாநகராட்சியின் அனுமதியின்றி 9 இடங்களில் பேனர் வைத்தனர். மேலும் குதிரை வண்டியில் சந்தோஷ்குமாரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதிக சத்தமாக பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.