திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. கழிவுகளை அகற்றும் பணி சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.